நீங்கள் தியானப்பயிற்சி செய்ய உங்களுக்கு எந்த வகையான ஆசனம் பொருத்தமானதாக இருக்கிறதோ, அந்த ஆசனத்தில் அமரலாம்.
இங்கே சில எளிய யோகா ஆசனங்கள் பற்றி அறிவோம்.
பதாஞ்சலி யோக சூத்திரத்தில் உள்ள"ஸ்திரம் சுக ஆசனம்" என்ற ஆசனத்தில் அமரலாம்.
நீங்கள் ஓய்வினமையை உணர்கிறீர்களா. ஓரிடத்தில் தொடர்ந்து அமர முடியவில்லையா? கீழே தரப்பட்டுள்ள ஏதாவது ஒரு ஆசனத்தை பின்பற்றவும்:
- 7நிமிடங்கள் செலுத்துங்கள்.சூஷூமமாக தியானம் செய்ய முடியும். நாற்காலியில் அமர்ந்து கொண்டும் செய்யலாம்.
உங்களுக்கு கால அவகாசம், மற்றும் இடவசதி இருந்தால் , பத்மசாதனம் என்ற உடற்பயிற்சி செய்யலாம்.
- நாடி சுத்த ப்ராணாயாமம் செய்யலாம்.
இப்போது சில முக்கியமான, புத்துணர்ச்சி அளிக்கவல்ல தியானம் செய்ய உதவும் ஆசனங்களை பற்றி அறிவோம்.
சாதாரணமாக அமரவும், ஆனால் சோர்வு அடைய கூடாது.
(1)- பத்மாசனம்-- தாமரை போன்ற ஆசனம்.
(2)- வஜ்ராசனம்- இரண்டு முட்டிகளை மடக்கி அமருவது.
(3)- சுகாசனம்-. இரண்டு கால்களையும் மடக்கி சாதாரணமாக அமருவது.
இத்தகைய யோகா ஆசனங்கள் உங்கள் அடிவயிற்றில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் அழுத்தம் இவற்றை குறைத்து விடுகிறது. முதுகு தண்டு வடத்தை சீரமைப்பு செய்கிறது.
கீழ் கண்ட யோகா ஆசனங்களை செய்யவும்.
1. பத்மாசனம்- தாமரை போன்ற ஆசனம்…
பத்மாசனம் மிகவும் பிரபலமான ஆசனம். எளிதாக செய்ய முடியும். தியானம் செய்ய எளிதாக இருக்கும். உங்கள் முதுகு தண்டு வடத்தை சீராக வைக்கிறது.
(1)- கால்களை முழுவதும் ஒன்றன் மேல் ஒன்றாக மடக்கி வைத்து கொள்ளவும்.
(2)- வலது காலை முட்டி வரை மடக்கி வைத்து விட்டு பின் வலது பாதங்களை இடது கால் தொடையில் வைத்து கொள்ளவும். அதேபோல் இடது கால் முட்டி வரை மடக்கி வைத்து விட்டு பின் இடது கால் பாதங்களை வலது கால் தொடையின் மேல் வைத்து கொள்ளவும்.
(3). இரண்டு முழங்கால்களும் மேல் நோக்கி சரியாக வைக்கவும். கைகள் இரண்டையும் உங்கள் உடலுக்கு அருகாமையில் வைக்கவும், கைகள் இரண்டையும் இரண்டு தொடைகளின் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கொள்ளவும்.முதுகு மற்றும் தலை நேராக வைத்துக் கொள்ளவும்.
2. வஜ்ராசனம்-- முட்டி போட்டு கொண்டு அமருவது.
(1)- இரண்டு முழங்கால்களும் மற்றும் இரண்டு முட்டிகளை மடக்கி வைத்து கொள்ளுங்கள். கீழே அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கால்களின் கட்டை விரலை ஒன்றோடு ஓன்று படும்படி வைத்து கொள்ளவும்.
(2). பின்னர் இரண்டு பாதங்களையும் விரித்து கொண்டு அமரவேண்டும். முழங்கால் மேல் அமர கூடாது.
(3). இரண்டு கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து இரண்டு தொடைகளின் மேல் வைத்து கொள்ளவும்.
குறிப்பு:- தேவை பட்டால் மிருதுவான டவல் அல்லது சிறிய பஞ்சினாலான தலையணையை வைத்து கொள்ளவும். வஜ்ராசனம் தொடை மற்றும் பின்னங்காலகளின் சதைகளை வலுவானதாக ஆக்குகிறது...சீரண உறுப்புகளை சரிசெய்ய உதவுகிறது.
3-. சுகாசனம். - சாதாரணமாக அமருவது
1-உங்கள் கால்களை சாதரணமாக மடக்கி வைத்து கொண்டு அமரவும்.
2- இரண்டு முழங்கைகளையும் உடம்பில் இடுப்பு பகுதிக்கு அருகில் உள்ள தொடையின் மேல் வைத்து கொள்ளவும்.
3- கைகள் இரண்டின் மீதமுள்ள பகுதிகளை முட்டிகளில் மேல் வைக்க வேண்டும்.தலை நேராக இருக்க வேண்டும் முதுகு தண்டு வடத்தை நேராக நிமிர்ந்து அமர வேண்டும்.
"சுகா" என்றால் மகிழ்ச்சி. தியானம் செய்ய அமரும் போது லேசாக புன்னகையுடன் அமர வேண்டும். உங்களுக்கு கால்களை மடக்கி வைத்து அமர முடியாவிட்டால், நாற்காலியில் அமர்ந்து கொண்டும் தியானம் செய்ய முடியும். அல்லது சுவர்கள் மீது சாய்ந்து கொண்டும் கூட தியானம் செய்யலாம்.