யோகப் பயிற்சியை மேம்படுத்த எட்டு குறிப்புகள்
யோகா ஒரு தெய்வீக ஒழுங்குமுறை. இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தில் அதன் வேர் இருந்தாலும், இன்றைய நவீன மன அழுத்தத்திற்கு யோகா மிகவும் பொருத்தமானது. யோகா இப்போது உலகமயமாக்கப் பட்ட ஓர் பயிற்சி முறை; மற்றும் யோக அறிவு நம் ஒவ்வொருவருக்கும் எளிதாக கிடைக்கிறது. உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வை அடைவதற்கு இது முக்கியம்.
யோக பயிற்சி முறைகளை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் எப்போதும் வழிவகை கள் உள்ளன. எனவே சில எளிய குறிப்புகள் மூலம் ஒரு யோகியின் மனநிலையை அடைந்து உங்கள் யோகா பாயை விரித்து பயிற்சிக்குத் தயாராகுங்கள்.
உங்கள் யோகப் பயிற்சியை மேம்படுத்த சில குறிப்புக்கள் அடங்கிய பட்டியலை இங்கு காணுங்கள்:
1. உங்கள் உடலின் வரம்புகளுக்கு மதிப்பளியுங்கள்
உங்கள் உங்கள் மூக்கு முழங்கையைத் தொடுமளவுக்கு முன்னோக்கி வளைய முடியுமா? சிலர் மற்றவர்களை விட அதிகமாக குனிய முடியும். உங்கள் திறமைக்குத் தகுந்தபடி மட்டும் குனியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். உங்கள் உடலின் வரம்புகளுக்கு மதிப்பளியுங்கள் அடுத்த வீட்டில் வசிப்ப வருடனோ அல்லது தொலைக்காட்சியில் காணப்படும் ஒருவருடனோ உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
யோக ஆசனங்களில் நிலையாக மற்றும் வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விதி. மிகக் கடுமையாக உந்தித்தள்ளி முன்னேறுதல், மற்றும் பயிற்சியை வரம்புமீறி செய்தல் அல்லது சோம்பேறியாக இருத்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வசதியாகவும் உறுதியுடனும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யுங்கள்
2. யோகப் பயிற்சியை புன்னகையுடன் செய்யுங்கள்
மகிழ்ச்சியுடன் யோகா செய்யுங்கள். நீங்கள் ஒரு நீட்டுவித்தல் பயிற்சியை உங்கள் திறனுக்கு மேற்பட்டு முயற்சி செய்தால் உடனடியாக புன்னகை மறைந்து விடும். புன்னகை மறைந்து விட்டால், ஏதோ சரியாகச் செய்ய வில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று நீங்கள் அதிகமாக உடலை வருத்தி நீட்டிக்கிறீர்கள்; அல்லது அந்த பயிற்சி உங்களுக்கு வசதியாக இல்லை. உங்கள் அழகான புன்னகையை மீண்டும் பெற உங்கள் உடலை சரிசெய்து கொள்ளுங்கள். வழக்கமான சீரான பயிற்சி முறையில், நீங்கள் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காணலாம்.
பயிற்சிக்குத் தயாராகுதல்: மற்ற யோக ஆசனங்களில் ஆழ்ந்து செல்வதற்கு முன் சூரிய நமஸ்காரம் சில முறைகள், அல்லது சில மென்மையான பயிற்சிகள் ஆகியவற்றைச் செய்து, உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள்.
3. சுவாசித்தல் :ஆழமான நீண்ட சுவாசம் அல்லது உஜ்ஜை சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
உஜ்ஜை மூச்சு அல்லது நீண்ட ஆழமான மூச்சுகள் நீங்கள் ஓய்வெடுக்க மற்றும் யோகத் தோற்றநிலையில் நீடித்து இருப்பதற்கு உதவும். மேலும் செய்ய மூச்சின் மீது கவனம் வையுங்கள். யோக நிலையில் ஓய்வெடுத்து உடல் நீட்டுவிக்கப் படுவதை உணருங்கள்.
4. உங்கள் யோகா பயிற்சிக்கு மரியாதையளித்துக் கௌரவியுங்கள்
யோகா ஒரு வெறும் உடல் உடற்பயிற்சி அல்ல, அது உங்கள் உண்மையான இயல்புக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. யோக ஆசனங்களை விழிப்புணர்வு, உள் நோக்கிய நிலை, மற்றும் உங்கள் உடலை கௌரவிக்கும் உணர்வுகளுடன் செய்யுங்கள். இது உங்கள் ஆசனப் பயிற்சிக்கு அதிகரித்த அருள் மற்றும் அழகை எடுத்து வரும்.
5. யோக அணுகுமுறையைப் பெறுங்கள். உள்நோக்கிச் செல்லுங்கள்.
யோகா தோற்றநிலைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட மூச்சுத் தாளங்களைப் பயன்படுத்துதல் சுவாசம் மற்றும் உடலை இணைக்கிறது. நீட்டிக்கப்படுகிற இடத்தின் மீது கவனம் செலுத்துதல் உடலையும் மனதையும் இணைக்கிறது. உடல், சுவாசம், மற்றும் மனம் ஆகியவை யோகாசனத்தின் போது ஒத்திசைந்து ஒன்றுகூடும். இந்த யோக அணுகுமுறை உங்கள் யோகப் பயிற்சியை ஆழப்படுத்த உதவுகிறது.
6. கவனியுங்கள்
நீங்கள் இந்தக் கையை அடிக்கடிப் பயன்படுத்துகிறீர்கள்? நிற்கும் போது எந்த காலின் மீது நீங்கள் சாய்ந்து கொள்ள முற்படுகிறீர்கள் ? உங்கள் உடலைப் பற்றிய விஷயங்களைக் கவனியுங்கள், குறிப்பாக ஒரு பக்கத்தை விட நீங்கள் ஒரு பக்கத்திற்கு அதிக சாதகமாக இருக்கிறீர்களா?
7. தியானம்.
யோகாசங்கள் உங்களைத் தியானத்திற்குத் தயாராக்குகின்றன. ஒரு ஆன்லைன் வழிகாட்டுதல் மூலம் வழிமுறைகளை பின்பற்றி சிரமமின்றி தியான நிலைக்குச் செல்லுங்கள். இளைப்பாறுங்கள். தியானம் செய்யங்கள். உங்கள் ஆசனங்களை முடித்துவிட்டு யோகா நித்ராவில் ஓய்வெடுங்கள்.. யோக ஆசனங்கள் தியானத் திற்கு உங்களைத் தயார்படுத்துகின்றன, உங்கள் யோகப் பயிற்சியை ஆழமாக்கு கிறது.
8. யோக பாயில் யோகா செய்யுங்கள் யோக வாழ்க்கை வாழுங்கள்
யாராவது புதியவர்களுக்கு உதவுவீர்களா? நீங்கள் கடினமான சூழல்களில் (கடினமான ஆசனங்களை உறுதிப்படுத்துவதற்காக நீங்கள் சுவாசத்தைப் பயன்படுத்துவது போல) வலியைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியுமா? யோகப் பயிற்சி செய்யும் ஒரு மணி நேரம் மட்டுமல்ல, மீதமுள்ள 23 மணிநேர வாழ்க்கையிலும் யோகாவின் பலன் பிரதிபலிக்கும். அதனால்தான் யோகா ஒரு உடற்பயிற்சி அல்ல; அது வாழ்க்கை முறை.
தினமும் தொடர்ந்து நாள் முழுவதும் தண்ணீர் நிறைய குடிக்கவும்.
உங்கள் யோகப் பயிற்சியை மேம்படுத்துவது எவ்வாறு?
ஒழுங்காக சீராகச் செய்யும்போது யோகா பல நன்மைகளை அளிக்கின்றன. எனினும், தவறான முறையில் செய்தால், யோக ஆசனம் வலி மற்றும் காயம் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். உங்கள் யோகப் பயிற்சிகளை மேம் படுத்துவதற்கும், சரிப்படுத்துவதற்கும் சரியான வழிகளைப் பின்பற்றுவது முக்கியம். ஒரு சிறந்த ஆரோக்கியமான மற்றும் மேம்பட்ட வாழ்க்கையை அடைய மேற்கண்ட யோகா குறிப்புக்களைப் பின்பற்றவும்.
யோகா பாயுடன் உங்கள் யோகப் பயிற்சி முடிவதில்லை அது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. இது உங்கள் உடல் மற்றும் நாள் முழுவதும் குறிப்பாக மன அழுத்தத்தில் இருக்கும் போது மூச்சின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதைப் பற்றியது. இந்த தியான மனநிலை உங்களை நேர்மறையான கண்ணோட்டத்துடன் வாழ வைக்கும். சாதாரணமாக மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய சவாலான சூழ்நிலைகளை நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும் . ஒரு தெளிவான கண்ணோட்டம், மற்றும் மங்கலற்ற கருத்து டன் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது என்பது உண்மையான யோகியின் அறிகுறியாகும்.
(இவை மூத்த ஸ்ரீ யோகா ஆசிரியரான தினேஷ் காஷிகர் அளித்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டவை )
யோகப் பயிற்சி உடல் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அதிக ஆரோக்கிய நலன் களைக் அளிப்பதற்கு உதவுகிறது. இது மருந்துக்கான மாற்று அல்ல. பயிற்சி பெற்ற ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் யோகப் பயிற்சி நுட்பங்களை கற்றுக்கொள்வதும், பயிற்சி செய்வதும் முக்கியம். எந்தவொரு மருத்துவ நிலையிலும், ஒரு மருத்துவர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரைக் கலந்தாலோசித்த பின்னர் பயிற்சி செய்யவும்.
ஸ்ரீ ஸ்ரீ யோகாவை நீங்கள் அருகில் உள்ள ஆர்ட் ஆப் லிவிங் (வாழும் கலை) மையத்தில் பயிலலாம். மேலும் பயிற்சிகள் அல்லது பகிர்வு கருத்துக்களைப் பற்றிய தகவல் தேவையா? info@srisriyoga.in என்னும் மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு எழுதுங்கள்.