எவ்வாறு ஓர் பிரத்யேக தியான இடத்தை உருவாக்குவது?

எவ்வாறு ஓர் பிரத்யேக தியான இடத்தை  உருவாக்குவது?

 

 

தியானம் என்பது 'உங்கள் நேரம்' மற்றும் நிச்சயமாக நீங்கள் அது சிறப்பாக அமையவேண்டும் என்று  விரும்புகிறீர்கள். நீங்கள் இப்போது சிறிது  தியானம் செய்திருந்தாலும்,  உங்கள் தியான நேரம் எப்படி விசேஷமாக இருக்கும் என்பதை அறிவீர்கள் - ஒரு மாற்றத்திற்காக எதுவுமே  செய்யாத நாளில் ஓர் நேரமாகக் கூட அது இருக்கக் கூடும்.

இதை  உற்சாகத்துடன் செய்யக் கூடாதா என்ன?  ஒவ்வொரு நாளும் இந்நேரத்தை எதிர் நோக்கும் விதமாக  உங்கள் வீட்டில் ஒரு சிறிய பகுதியில் சொந்த தனி தியான இடம் உருவாக் கலாமே?

தியானம் செய்வதற்காக ஒரு தனி  அறையைப் பெற்றிருப்பது கட்டாயமானது அல்ல என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு தோட்டத்தில், ஒரு வேலைக்கு, ஒரு காரில் (நீங்கள் வாகனம் ஓட்டவில்லை என்றால்) அல்லது விமானத்திற்காகக்  காத்திருக்கும் விமான நிலையத் தில் கூட, நீங்கள் எங்கு விரும்புகிறீர்களாளோ  அங்கு  நீங்கள் தியானிக்க முடியும். இங்கே  உங்களுக்கென  ஓர் பிரத்தியேக தியான  இடம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் அல்லது (மற்றும் பிற) நோக்கங்களுக்காக உங்கள் வீட்டில் இருக்கும் அறையை தியானத்திற்கென மீண்டும் வடிவமைக்க, கீழ்க்கண்ட குறிப்புக்களை   அளித்திருக்கிறோம்.

1. விருப்பமான  இடத்தை தேர்வு செய்யவும்

பசுமையான மரங்கள், மென்மையான நீல நிற நீர் அல்லது அழகிய புதர் தோட்டம் ஆகியவற்றை எதிர்கொள்கின்ற  ஒரு அறை கிடைக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், அது சிறப்பானது. நீங்கள் ஏற்கனவே இந்த அறையை ஒரு படுக்கையறை அல்லது வேறு காரணங்களுக்காகப் பயன் படுத்திக் கொண்டிருந்திருக்கலாம்.ஆனால் அது ஒரு அழகிய இடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது என்று கருதினால், நீங்கள் தியானிக்க அந்த அறையிலேயே   ஒரு சிறிய மூலையைத் தேர்ந்தெடுத் துக் கொள்ளலாம்.

மேலும், வேறு ஓர் அறையை (இது போன்ற ஒரு அழகான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை எனினும் ) பயன்படுத்த வேண்டியிருந்தால்,  நீங்கள் படைப்பாற்றலுடன் அதனை இயற்கைச் சூழலுள்ளதாக வடிவமைக்கலாம். உதாரணமாக, அழகிய இயற்கைக் காட்சி சுவரொட்டி அல்லது ஓவியத்தை சுவரில் பொருத்தி அத்தகைய இயற்கை சூழலை உருவாக்கலாம்.

2. இடத்தை சுத்தமாக வைத்திருங்கள்

இது ஒரு எளிய தர்க்கத்தில் வேலை செய்கிறது - உங்களை சுற்றியுள்ள சூழ்நிலை சுத்தமாக இருந்தால்,  தியானத்தில் போது இளைப்பாறுதலைப் பெறலாம். உங்கள் தியான இடம்  முடிந்த வரை சுத்தமாகவும் சுகாதாரத்துடனும்  இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அது  உங்கள் தியான அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

3. காற்றோட்டமான இடமாக இருக்கட்டும்

ஒரு காற்றோட்டமான  அறையில் நிச்சயமாக நீங்கள் உங்கள் தியானம் மேம்பட்டதாக இருக் கிறது. உழைப்பு மிகுந்த  நீண்ட  நாளுக்குப் பிறகு ஓய்வெடுக்கும்போது , ​​ஜன்னல்களிலிருந்து வரும் காற்று உங்கள் முகத்தில் படும் உணர்வை நன்கு அனுபவித்து மகிழ்வீர்கள்.

4. வெளிர் நிறங்கள்  நல்லது

பிரகாசமான நிறங்களுடன் ஒப்பிடுகையில் வெளிர் நிறங்கள் மிகவும் இனிமையான உணர்வை தருகின்றன. வெள்ளை அல்லது வெளிர் நிற  சுவர்களைக் கொண்ட ஒரு அறையை நீங்கள் தேர்வு செய்யலாம். அல்லது, அதை  ஒத்த மென்மையான விளைவைக் கொடுக்கும்  நீங்கள் விரும்பும்  ஒரு வால்பேப்பரை தேர்வு  செய்யலாம். அது போன்று ஜன்னல்களுக்கு மென்மையான வெளிச்சம் பரவக் கூடிய நிறங்கள் கொண்ட  திரைச்சீலைகளை  பயன்படுத்தலாம்.

5. நீங்கள் விரும்பினால் ஒளிரச் செய்யுங்கள்

உங்கள் ஜன்னல் திரைகள் போதிய அளவு சூரிய ஒளியை உறுதி செய்யும். ஆனால் மாலையில் நீங்கள் தியானம் செய்தால்,  அறைக்கு மின் விளக்குகளைத் தேர்வு செய்யலாம். சிலருக்கு, மங்கலான விளக்குகள் , சிலருக்குப்  பிரகாசமானவை விருப்பமானவைகளாக இருக்கின்றன..

6. ம்ம்.... நறுமணம்...

உங்கள் அறை முழுவதும் நன்றாக வாசனையுடன்  இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் விருப்பப்படி நீங்கள் பல்வேறு நறுமணங்களைத்  தேர்வு செய்யலாம். நறுமண தூபக் குச்சிகள் அல்லது எண்ணெய்கள் எதுவானாலும் தேர்வு உங்களுடையது. மேலும், நீங்கள் தியானம் செய்யும்போது, ​​அவை ஏற்றப் பட வேண்டுமா அல்லது . (புகை அல்லது வாசனை மூலம் நீங்கள் பாதிக்கப் பட்டால் ) தியானத்திற்கு முன்பே அவை ஏற்றப் பட்டு புகையின்றி வாசனை மட்டுமிருக்க வேண்டுமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

7. இடுக்கமற்ற இடம் சிறந்தது.

பரந்த திறந்தவெளி ஒரு அறையை விட  சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்க உதவுகிறது. நீங்கள் உங்கள் படுக்கையறை அல்லது தியானத்திற்கான மற்ற அறைகளில் ஒன்றை பயன்படுத்த திட்டமிட்டால், உங்கள் தியான மண்டலம் ஒழுங்கற்றதாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அறையில் மற்ற விஷயங்கள் இருக்கலாம்;  ஆனால்  எப்போதும் உங்கள் தியான இடம் சுத்தமாகவும் காலியாகவும் இருக்க வேண்டும்.

8. யோகா பாய் பயன்படுத்துங்கள்..வசதியாக இருக்கும்..

நேரடியாக தரையில் தியானம் செய்வதைத் தவிர்ப்பது  சிறந்தது. நீங்கள் ஒரு மென்மையான யோகா பாய் அல்லது ஒரு வசதியான குறைந்த-உயரமுள்ள  மெத்தையைத்  தேர்வு செய்யலாம். முதுகைத் தாங்கிக் கொள்ள மென்மையான  ஓர் குஷனை  பயன்படுத்தலாம்  பாய் மீது அமர்வது கடினமாக இருந்தால், சரியான தலையணையை முதுகுக்கு வைத்து ஒரு நாற்காலியில் அமர்ந்தால் நீங்கள் தியானிக்கும்போது வசதியாக இருக்கும்.

9. தொலைபேசியை தவிர்த்து விடுங்கள்

தியானம் நேரம் உங்கள் நேரம் என்பதால், உங்கள் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆகியவை உங்களுக்கேயான  அந்த சில நிமிடங்களுக்கு சற்றுக் காத்திருக் கட்டும். உங்கள் மொபைல் ஃபோனை அணைத்து விடுங்கள் அல்லது சைலன்ட் முறையில் அமைத்து விட்டு நீங்கள்  மற்றொரு அறையில், தியானம் செய்யுங்கள். இதன் மூலம் உலகத்தை விட்டு உங்களை நீங்கள் துண்டித்துக் கொண்டு, தியானம் நிறைவடைந்தவுடன்   நீங்கள் நன்றாக இணைத்துக் கொள்ள முடியும்!

10. மென்மையான இசை நல்லது

நீங்கள் தியானத்தில் இருக்கும்போதே பின்னணியில் இசையை விரும்பினால், உங்கள் அனுபவத் தை மேம்படுத்தும் சில மென்மையான இசையை  நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால், எதுவுமின்றியே  நீங்கள் தியானிக்க முடியும்! தேர்வு முற்றிலும் உங்களு டையது!

 

இப்போது உங்களுடைய சிறிய சரணாலயம் தயார்.  'உங்கள் நேரத்தை' அனுபவிக்கவும்  நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்!  சந்தோஷமாக தியானம் கிடைக்கட்டும் !

 

உங்கள் பணியிடத்தில் ஒரு தியான இடம் உருவாக்கலாம் !

உங்களுக்கு நேரமில்லையெனில், தியானம் செய்ய ஒரு சில நிமிடங்கள் மட்டுமே  கிடைத்தால் உங்கள் பணியிடத்தி லேயே  தியான இடத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

  1. ஒவ்வொரு நாளும் தியானம் செய்ய உங்கள் பணியிடத்தில் நீங்கள் ஒரு சிறிய இடத்தை தேர்வு செய்யலாம். அந்த மூலையில் சுத்தமாகவும் காலியாகவும் வைத்திருங்கள். நீங்கள் விரும்பினால் ஒரு சில இனிமையான படங்களை  வைக்கலாம்.

 

  1. தியானத்திற்காக உங்கள் பணியிடத்தில் நிரந்தரமாக ஒரு மென்மையான போர்வையை வைத்துக் கொள்ளலாம்.. நீங்கள் தியானம் செய்ய அமரும் முன்னர் , தரையிலோ அல்லது உங்கள் நாற்காலியிலோ அதை விரித்துக் கொள்ளலாம்.
  2. நீங்கள் தியானத்தில் இருக்கும்போது சிறிது குளிராக உணர்ந்தால், உங்கள் அருகில் சூடான  ஏதாவதொன்றை  வைத்துக் கொள்ளலாம்.
  3. உங்கள் தொலைபேசியை சைலன்ட் முறையில்  மாற்றி விடுங்கள். தியானம் செய்யும் போது ஒரு சில நிமிடங்களுக்கு உங்கள் லேப்டாப் அணைக்கப் பட்டிருப்பதை   உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான உரைகளால் ஊக்குவிக்கப் பட்டு, சஹஜ் சமாதி தியான ஆசிரியர் சிங்கி சென் னின்  உள்ளீடுகளை இணைத்து பிரித்திகா நாயர் எழுதியது.

Get to learn Meditation