அனைத்தையும் தைரியத்துடன் ஒரு பெரிய கூட்டத்தில் பாடுவது கூட, செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
வாழ்க்கையின் இன்னும் கூட தைரியத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஓர் நல்ல வருங்காலத்தினை அடைய குதித்தெழ பயப் படுகின்றீர்களா ?
சவாலான நேரங்களில் நாம் பாதுகாப்பான தெரிந்த வழிகளையே செயலுக்குத் தேர்ந்தெடுத்துப் பின் தைரியமற்று இருந்ததை எண்ணி வருந்துகிறோம்.உண்மையல்லவா ?உங்களுக்குத் தெரிந்த வசதியான வேலை அல்லது முற்றிலும் புதிய தெரியாத வேறொன்று என்று விருப்பத்தேர்வு எழும் போது, தெரிந்த விஷயம் கவர்ச்சிகரமாகவும், தெரியாதது பயந்தோடும்படியும் இருக்கின்றதல்லவா?
அல்லது ஒரு வேலை அன்றாட வாழ்வில் கடமைகள் நடைமுறைகள் இவற்றோடு சில விஷயங்களைத் தைரியமாகச் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படக் கூடும். உதாரணமாக உடன் பணிபுரிபவருடன் கடினமான விவாதம் ஏற்பட்டு, அடுத்த நாள் அவரைச் சந்திக்க தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.
இந்த மன தைரியத்தை அடைய தியானத்தை முக்கியமாகக் கருதியிருக்கிறீர்களா? இது வரையில் தியானமே செய்ததில்லை என்றால், இப்போது முயன்று பாருங்கள். பயிற்சி நீண்ட காலம் விடுபட்டு விட்டாலும் மீண்டும் தொடரவும் அதிகப் பலன்களைப் பெற எவ்வாறு தியானத்தினை ஆழப் படுத்திக் கொள்வது என்பதினையும் கற்றுக் கொள்ளுங்கள். காலப்போக்கில் பலன்கள் அதிகரிக்கும், எனவே நல்ல ஆசிரியர் ஒருவரை அணுகி, தியானம் செய்யப் பயிலுங்கள்.
சிறிது கால தியானப் பயிற்சிக்குப் பின்னர், இயல்பான அன்பு, தைரியம் அனைத்தும் சரியே இன்னும் ஆழ்ந்த உணர்ச்சி, ஆகியவை உங்கள் விழிப்புணர்வில் எழுவதைக் காண்பீர்கள். மனம் தடைகளிலிருந்து விடுபடும் போது, பதட்டப் படுவதற்குக் காரணமே இருக்காது. வாழ்விலிருந்தும், பிற உயிர்களிடமிருந்தும் தனிப் பட்டு இருப்பது போன்ற உணர்வு குறைந்து, இயல்பான தைரியம் ஒளிவீசத் துவங்கும்.
பல ஆண்டுகள் பயிற்சி செய்த பின்னர், தியானம் எனக்கு நிகழ் தருணத்தில் வாழும் நம்பிக்கையையும், திருப்தியையும், சிறிய பெரிய சவால்களைச் சந்திக்கும் தைரியத்தையும் அளித்திருக்கின்றது.
தைரியம் இப்போதே நிகழுவது, அதை முயன்று நிகழ வைப்பதில்லை. இயல்பாகவே நம்முள் இருக்கும் தைரியத்தை வளர்க்க தியானம் நல்கும் நான்கு வழிகள் இதோ:
1.தியானம் பிறரிடமிருந்து உங்களை த்தியாசமாக்குகின்றது
(Meditation Makes You Stand Out From The Rest)
உங்களுக்கு தைரியம் குறைவாக இருக்கும்போது,நிலைமையுடன் ஓர் வலுவான இணைப்பு இல்லாமல் இருந்ததைக் கவனித்திருக்கின்றீர்களா? ஒரு பெரிய கூட்டத்தில் பாடுவது கடினமாகவும் நண்பர்களுக்கு மத்தியில் பாடுவது எளிதாகவும் இருந்ததைக் கவனித்திருக்கிறீர்களா? இது ஏனெனில், எங்கேயோ நண்பர்களுடன் சார்பு இருப்பதை அறிகிறீர்கள், அதனாலேயே அதை எளிதாக உணருகின்றீர்கள்.ஒரு பெரிய கூட்டத்தில் பாட வேண்டுமெனில் அவர்கள் என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்பதைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கின்றது.
அனைத்துப் பயன்களும் பிறரிடமிருந்து தனிப்படுத்தப் படுதலினாலேயே ஏற்படுகின்றன என்று பழமையான வேத மற்றும் யோகா நூல்கள் கூறுகின்றன.
தியானம், நமக்குப் பிரச்சனைகளை விட மிக அதிகமாக நீங்கள் பெரியவர் என்பதை உணர்த்துகின்றது.அப்போது தைரிய ஊற்றுப் பெருகி, உங்களை மற்றவர்களை விட சிறப்பானவராக இருக்க வைக்கின்றது.
குறிப்பு: பயம் ஏற்படும் ஒரு நிலைமை அடுத்த முறை நீங்கள் எதிர்கொண்டால், -உதாரணமாக ஒரு பரீட்சைக்குச் செல்வது- ஒரு சில நிமிஷங்கள் எடுத்துக் கொண்டு தியானம் செய்யுங்கள்.
ஆழ்ந்து மூச்சு விடுங்கள் .-வெளிவிடும் மூச்சில் அதிக கவனம் இருக்கட்டும்.உங்களுடைய உணர்வுகளைக் கவனியுங்கள். வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு, அல்லது நெஞ்சுப்பகுதி சுருங்குதல், போன்றவை. உங்கள் நிலைமையைப் பற்றிய அனைத்து எண்ணங்களையும் விட்டுத் தள்ளுங்கள். உங்கள் உடல் உணர்வுகளின் மீதே கவனம் இருக்கட்டும்.சமமான நீண்ட வெளிமூச்சில் மற்றும் உணர்வுகளில் கவனம் இருக்கட்டும். எந்த உணர்வுகளையும் தடுக்க முயலவேண்டாம். சில நிமிஷ நேரம் இவ்வாறு செய்த பின்னர் எவ்வாறு உணருகின்றீர்கள் என்று கவனியுங்கள்.
2. மனம் பயத்தினைக் கடந்து வருவதற்கு தியானம் உதவுகின்றது (Meditation Trains The Mind To Overcome Fear)
தியானத்தின் மூலம், ஒவ்வொரு கணத்தைப் பற்றியும்( இனிமையானது மற்றும் இனிமையற்றது) நமது விழிப்புணர்வு அதிகரிக்கின்றது.ஒழுங்கான தியானத்தின் மூலம், உங்கள் மனம் பயம் போன்ற உணர்ச்சிகளில் வசதியாக உணருகின்றது.தியானத்தின் துவக்கத்திலும், பின்னர் நம் வாழ்வின் பல கட்டங்களிலும், பயத்தைத் தடுப்பதை நிறுத்தும் போது, நமது உள் மனதிலுள்ள அம்சமான தைரியம் ஒளி வீசத் துவங்குகின்றது.
குறிப்பு: உங்கள் வாழ்க்கையில் உங்கள் தைரியத்திற்குச் சவாலான விஷயங்களைப் பட்டியலிடுங்கள்.பின்னர் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக 5 முதல் 20 நிமிஷங்கள் அமருங்கள்.இன்னும் தியானம் செய்யப் பழக வில்லையெனில், ஏதேனும் ஒரு ஆன் லைன் தியானத்தைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் கண்களைத் திறக்கும்போது, பட்டியலில் உள்ளவற்றுக்கு விடை எழுதுங்கள். உங்கள் மனம் அமைதியாக சமநிலையில் இருக்கும்போது எவ்வாறு சரியான விடைகள் தாமே வருகின்றன என்று பாருங்கள்.
3. தியானம் உங்களை வலுவானவராக வெளிப்பட வைக்கின்றது (Meditation Makes You Emerge Out As A Strong Person)
நீங்கள் எதையாவது கவலையுடன் இருக்கும்போது,, உங்கள் மனம் என்ன நடக்கும் என்பதைத் திரும்பத்திரும்ப அசை போட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக பணியில் எதும் எதிர்மறை கருத்துகள் ஏற்பட்டு, உங்கள் மேலாளரை அடுத்த நாள் சந்திக்க வேண்டியதிருந்தால் அதையே எண்ணிக் கொண்டிருப்பீர்களா? அல்லது எதுவானாலும் சரி என்று நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருப்பீர்களா?
அல்லது தெரு நாயுடன் மோசமான அனுபவம் ஏற்பட்டால், இப்போது ஒவ்வொரு முறை ஒரு நாய் தெருவில் செல்வதைப் பார்த்தாலும் அதே பயம் ஏற்படுகிறது.
நமது கவலைகள், பயன்கள், என்பவை ஒரே எண்ணம் நமது மனதில் சுழற்சியுடன் ஏற்பட்டுக் கொண்டிருப்பதுதான்.சஹஜ் சமாதி தியானத்தில் நாம் கூறு மந்திரம் இந்தப் பள்ளத்திலிருந்து நம் மனதை விடுவித்து, அசைவற்ற சுகமான பரப்பிற்கு எடுத்துச் செல்கின்றது.
மனம் தெளிவாகும்போது, நம்பிக்கை மிகுந்த பரப்பு உருவாகின்றது.அது சரியான செயலுக்கு வித்திடுகின்றது.மனம், பயம் மிகுந்த உணர்ச்சித் தடைகளிலிருந்து வெளியேறுகின்றது.
குறிப்பு: பயம் ஏற்படுத்தும் நிலைமை எழும்போது, ஹ்ம்ம் பயிற்சினைச் செய்யுங்கள்
4. தியானம் அனைத்தையும் நிகழ வைக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது (Meditation Increases Energy That Can Make Everything Happen)
பிராணா (உயிர் வலிமை ஆற்றல்) தான் உங்களை வலுவானவராக, உற்சாகமானவராக நம்பிக்கை மிகுந்தவராக ஆக்குகின்றது. நமது பிராண சக்தி அதிகரிக்கும்போது நாம் இயல்பாகவே தைரியமானவராக ஆகின்றோம்.
உங்களுடைய திறமை என்று நீங்கள் மதிப்பிட்டதை விட மிக அதிகமாக நீங்கள் செயலாற்றி சாதித்ததை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா ? அது ஒருவேளை, நீங்கள் காதலிக்கும் போதோ, அல்லது ஒரு இலக்கை அடைய முழுமையாக உங்களை அர்ப்பணித்திருக்கும் போதோ இவ்வாறு நிகழ்ந்திருக்கக் கூடும் அல்லவா? இந்த 100 சதவீதம் அர்ப்பணிப்பு மற்றும் நிகழ் காலத்தில் லயித்திருத்தல் உணர்வுகள் தைரியம் நிறைந்தவையாகும்.
குறிப்பு: வேலையைத் துவங்குவதற்கு முன்னர் 10-15 நிமிஷங்கள் தியானம் செய்யுங்கள். இது நாள் முழுவதும் எந்த சவாலான நிலைமை எழுந்தாலும் உங்களை வலுவாக வைத்திருக்கும்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரைகளிருந்து எடுக்கப் பட்டது.
மேல்நிலை தியானப் பயிற்சி ஆசிரியரான கிறிஸ் டாலே யின் கருத்துக்களை உள்ளடக்கி ஜானெட் ஸ்காட் என்பவரால் எழுதப் பட்டது.