எவ்வாறு சரியான முடிவுகளை எடுப்பது? நான் தேர்வு செய்பவை சரியானவையா நல்ல பலன்களை அளிக்குமா என்று எப்படித் தெரிந்து கொள்வது? என்னுடைய எண்ணங்கள் என்னுடைய பணியினை நேர்மறையாக்கும்; பங்குதார்கள் நான் செய்பவற்றில் மகிழ்ச்சியடைவார்கள் என்று எவ்வாறு உறுதி செய்து கொள்வது?
உங்களது அன்றாட வாழ்க்கையில் இத்தகைய கேள்விகள் எழாத நாள் மிக அபூர்வம் என்றே கூறலாம்.பணியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியதுள்ளது. செலவுகளைக் குறைத்தல், பணியை பிரித்து விடுதல், வளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல், போன்ற பல ஆகும். மேலாளர் பொறுப்பில் உள்ளவர்களுடைய சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கும் திறனே அவர்களது செயலாக்கத்தின் அளவுகோல் ஆகின்றது.
தியானம் எவ்வாறு முடிவு எடுக்கும் திறனுக்கு உதவுகின்றது என்பது அதிசயிக்கத் தக்க விஷயம். பழமையான தியானப் பயிற்சி, ஒரு சக்தி மிகுந்த வழி. அது உங்கள் மனதை மாற்றியமைத்து, ஆற்றல் மிகுந்ததாக்கி, சிறப்பான முடிவுகளின் இருப்பிடமாக்கு கின்றது.நல்ல முடிவுகள் உங்களது எண்ணங்களின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைகின்றன.இவை தியானத்தின் மூலம் புலப்படும்.
#1 கவனம் செலுத்தும்,இயல்பான சாந்தமான மனம்
தியானம் மனதில் சேர்ந்துள்ள அழுத்தங்களை வெளியேற்றி, அழகாக அமைக்கின்றது. உள் மனதில் சாந்தம் இருந்தால் தாமாகவே வெளியுலகில் அதிகத் தெளிவு ஏற்படும். அழுத்தங்களிலிருந்து விடுபட்ட பதட்டமற்ற மனம் கவனத்துடனும் அமைதியுடனும் இருக்கும்.இத்தகைய மன நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் மிக அதிகப் பயனுள்ளவை யாகவும், சமநிலையிலும் இருக்கும். வெளியுலகத் தொடர்பின் காரணமாக நம் மனதில் பல்வேறு உணர்வுகள் தோன்றுகின்றன. தியானம் இவற்றை விடுத்து, சரியான மன நிலையில் இயல்பாக பாரபட்சமற்ற முடிவுகளை எடுக்க உதவுகின்றது.
#2 நல்ல தலைவர் தன்னுடைய குழுவில் சார்புணர்வுடன் இருப்பார்.
பிறரின் கருத்துக்களை ஏற்கவும், அவற்றில் நல்லனவற்றைப் பாராட்டவும் செய்வார். தியானம் இந்த குணத்தை அடைய உதவுகின்றது. பயம், பதட்டம், விசனம் குற்ற உணர்வு அல்லது பழைய முடிவுகளைப் பற்றிய கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகள், முடிவெடுக்கும் விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.சீரான தியானம் இத்தகைய நிகழ்வுகளைக் கடக்க உதவி முடிவுகள் எடுக்க சரியான சமநிலையைத் தருகின்றது.
#3 பகுத்தறியும் சிந்தனை
ஒழுங்காக தியானம் செய்வதால் நீங்கள் மனச் சிக்கல்களற்றும்,உணர்ச்சிகளில் மாட்டிக் கொள்ளாமலும் அறிவுக் கூர்மையுடன் இருப்பீர்கள். நிலைமைகளை பகுத்தறிந்து மதிப்பிடு வீர்கள். லாபகரமான முடிவுகளையே எடுப்பீர்கள் " என்கிறார் வாழும் கலையின் தியான ஆசிரியரான ப்ரியா ராவ். தியானம் உங்களுக்கு மூளையின் வலது மற்றும் இடது புறங் களிருந்து எண்ணங்களில் சம நிலையை அளித்து, உணர்ச்சி வசப்படாமல் தீர்வு காணும் முடிவுகளை எடுக்க உதவுகின்றது.
நீர் அசைவின்றி இருக்கும்போது உங்களது உருவத்தின் பிரதிபலிப்பைமற்றும் நீரின் ஆழத்தைக் காணலாம். ஆனால் ஒரு கல்லை வீசும்போது நீர் கலங்கி, இரண்டையுமே உங்களால் பார்க்க முடியாது. அது போன்று, மனம் அமைதியாக இருக்கும்போது நீங்கள் முடிவெடுக்க தேவையான அளவுருக்கள் மற்றும் பிரச்சினையின் ஆழம் விளைவுகள் அனைத்துமே தெளிவாகத் தெரியும்.
#4 வலுவான மனம்
தியானம் ஆற்றல் மிகுந்த மகிழ்ச்சியான உற்சாகமான உங்களைக் கண்டுபிடித்துக் கொள்ள உதவுகின்றது. மலர்ந்த உங்களில் எவ்வளவு வேடிக்கை இன்பம் நிறைந்துள்ளது என்று அறிந்து கொள்கின்றீர்கள். அதிக வேலைப் பளு, அழுத்தம், காலக்கெடு ஆகியவற்றை எளிதாகச் சமாளிக்கவும், சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்கவும் உங்களால் முடியும்.
நீங்கள் எதையாவது - உங்கள் முடிவு அல்லது உங்கள் எண்ணத்தின் கோணம் - எதுவானாலும் அதை எவ்வளவு தீர்மானமாக மற்றும் பணிவாக எடுத்துக் கூறுகிறீர்கள் என்பதிப் பொறுத்தே அதன் விளைவு இருக்கும்.உறுதி மற்றும் பணிவு இவையிரண்டும் சரியான சமநிலையில் இருப்பதற்கு உங்கள் மனக் கூர்மை முக்கியமாகும்.என்று கூறுகிறார் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள மூத்த நிறுவனப் பயிற்சியாளர் நீரஜ் கொஹ்லி .
#5 உள்ளுணர்வு, கருத்து, மற்றும் கூர்நோக்கு
பாரம்பரியமாக உள்ளுணர்வினால் எடுக்கப் படும் முடிவுகள் உயர்ந்தவை,முழுமையானவை.முயற்சியற்ற செயல் முறையாகிய தியானம் உள்ளுனர்வினை அதிகரித்து, கருத்து மற்றும் கூர் நோக்கு இவையும் மேம்படச் செய்கின்றது. உள்ளுணர்வு என்பது எண்ணத்தின் கூடுதல் பரிணாமம். தியானம் செய்பவர்களுக்கு மட்டுமே இதைப் பயன் படுத்த முடியும்.
என்னுடைய பணியில் , எடுக்கும் முடிவுகள் அதிகப் படைப்பாற்றல் புதுமை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒழுங்காகத் தியானம் செய்து வருகிறேன்.நான் என் அடியுணர்வு கத்தியைப் போன்று கூர்மையானதாக ஆவதையும் என் பணிகள் குறையற்றதாக இருப்பதையும் அறிகிறேன்." என்கிறார் ஒரு முன்னணி விளம்பர முகவர் படைப்பு இணையாளரான ரோஹித்.
எவ்விதமான பணியிலும் எப்போதுமே இழுப்பும் தள்ளுதலும் இருக்கும். நாம் உகந்த பொருத்தத்தினை சமநிலை பெற்று அடைய வேண்டும். நமது பணியின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய கூர் நோக்கும் கருத்துக்களும் மற்றும் அலுவல் நோக்கங்களும் நம்மை இந்தப் பொருத்தத்தை கண்டு பிடித்து அடைய உதவும்.தியானம் நமது கருத்துக்களை யும் கூர் நோக்கினையும் மேம்படுத்திக் கொள்ள உதவும் என்கிறார் நீரஜ்.