ஓர் வெள்ளெலி சக்கிரத்தின் மீது எங்கும் சென்றடையாமல் ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்திருக்கின்றீர்களா? உங்கள் வாழ்க்கையும் அது போன்றே உள்ளது என்றும் எண்ணியிருக்கின்றீர்களா? ஆகவே சக்கரத்திலிருந்து வெளியேறி, நீங்கள் கனவு காணும் உலகிற்குச் செல்ல வேண்டாமா? சில சமயங்களில் இந்த இரு உலகங்களுக்கிடையே உள்ள பாலம் நம்மிடமே இருக்கின்றது. அதை நாம் மட்டுமே கட்ட முடியும். நமது தோற்றம் மட்டுமேயல்லாத உண்மையில் நாம் யார் என்னும் நமது வெளிப்பாட்டில்தான் நமது ஆளுமை என்பது தீர்மானிக்கப் படுகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்களும் ஒரு முக்கியமானவராக ஆக வேண்டாமா? ஆம் எனில், தியானமே உங்கள் பேச்சுத் திறனாகும்.
#1 நம்பிக்கை
நம் மீது நம்பிக்கையுள்ளவராகத் திகழ முதலில் எது நம்மைத் தடுக்கிறது என்று கவனிக்க வேண்டும். தோல்விகள்? இழந்த வாய்ப்பு ? பிறரின் எதிர்பார்ப்புக்களுக்குத் தகுந்த முறையில் இருக்கும் திறன் இல்லை? அவமானப் படுத்தப்பட்டு,சிறுமைப் படுத்தப் பட்டு பயனற்றவன் என்று கருதப் படுதல்? இத்தகைய கணங்கள் உங்களை மூழ்கடிக்கலாம்.ஆனால் இத்தகையவை கடந்து சென்ற கணங்கள் , அவை இப்போது இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா?ஓர் குப்பையை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது போன்று அவற்றைப் பற்றிக் கொண்டிருந்தாலே அவை நம் மனதை விஷமாக்குகின்றன. நீங்கள் தியானம் செய்யும்போது, அத்தகைய வேதனையளிக்கும் அனுபவங்களை விளக்கி விடுவது எளிதாகின்றது." தியானம் உங்களை முற்றிலும் புதியவராக்கி விடுகின்றது, ஏனெனில் நீங்கள் அனைத்து சாத்தியங்களும் நிறைந்த பரப்பாகிய நிகழ் தருணத்தில் வாழத் துவங்கு கின்றீர்கள்." என்கிறார் சஹஜ் சமாதி ஆசிரியரான பிரியா ராவ். நீங்கள் எவ்வளவு ஆற்றலுள்ளவர் என்று நீங்கள் அனுபவிக்கும்போது, எவ்வளவு நம்பிக்கை அடைகின்றீர்கள் என்று கூறத் தேவையே இல்லை. தியானம் உங்களை நம்பிக்கை தைரியம்.ஆகியவற்றை கண்டுணரச்செய்கின்றது.
#2 நன்னம்பிக்கை
உங்கள் சந்தேகங்கள் எதிரமரையினை ஏற்படுத்துவதைக் கவனித்திருக்கிறீர்களா ? உங்கள் முயற்சிகளையும் திறமைகளையும் நீங்களே சந்தேகப் படும்போது, நீங்கள் எதற்கும் உதவாதவர் என்று உணரத் துவங்குகின்றீர்கள். இந்த தீய எண்ணச் சுழற்சினை அகற்ற சிறந்தது தியானமே." தியானம் உங்கள் ஆற்றலை உந்தி வெளித் தள்ளுகின்றது. .அத்தகைய உயர் ஆற்றல் நேர்மரையின் அடையாளம். சந்தேகங்களும் எதிர்மறை எண்ணங்களும் நீங்கள் நேர்மறையாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது. என்கிறார் பிரியா ராவ், நமது தியான வல்லுநர். மேலும் அது வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மாற்றும். சவால்களில் சந்தர்ப்பங்களைக் காணவும் உதவும். நுண்ணிய அளவில் நேர்மறை தானாகவே நேர்மையினையே நாடும். அது உங்கள் ஆளுமையில் பிரதிபலிக்கும். அதிகமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எவ்வாறு நன்னம்பிக்கையை உங்கள் வாழ்வின் வழியாகக் கொள்வது என்பதை மேலும் அறிய.....
#3 உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிய
நீங்கள் விரும்பியதைச் செய்யும்போது நன்றாக உணருவதையும், கடமை அல்லது பொறுப்பாகக் கருதும் ஒன்றைச் செய்யும்போது அதுவே தலைகீழாக உணருதலையும் கவனித்திருக்கின்றீர்களா? சர்வ தேச அபெக்ஸ் பயிற்சி ஆசிரியரான ராதிகா ஸ்ரீவஸ்தவா பொறுப்புக்கள் என்பவை நம் வாழ்வில் முக்கிய மானவை ஆனாலும், நாம் செய்ய விரும்புவது என்பவை நமது வரையறைகளை நமக்கு உணர்த்தி, சிறப்புயர்வினை நோக்கி நம்மை உழைக்க வைக்கின்றது என்று கூறுகின்றார். "தியானத்தில் நமது உயர் இருப்புடன் நாம் தொடர்பு கொள்கின்றோம்.உங்களுக்கு சலிப்பான இவ்வுலக வாழ்க்கையில் புத்துயிர் தெரிப்பினை அளிக்கும் ஆர்வம், எது என்று கண்டறிந்து கொள்கின்றீர்கள்.உங்கள் இதயத்தின் ஆழ்ந்த விருப்பத்தினை தியானம் உங்களைச் செவி மடுக்க வைப்பதால், வாழ்வு. நிறைவாகிறது.மகிழ்வோடு இருக்கும்போது, சலிப்பான பணிகளைக் கூட விரைவில் முடித்து, உங்களுக்கென்று தனி அடையாளம் காட்டும் பணிகளைச் செய்ய நேரம் கிடைக்கின்றது. நிறைவாக உணரும்போது அது உங்கள் முகத்திலும், ஆளுமையிலும் தெரிகின்றது.
#4 கருணை
சிரமத்தில் நீங்கள் இருக்கும்போது, எதிர்பாராமல் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெரும் உதவி, உங்களை நன்றாக உணரவைக்கின்றது அல்லவா? உங்களில் ஏதோ ஒன்று மலர்கின்றது. உங்களை மகிழ்ச்சியாக்குகின்றது. அது கருணையின் ஒரு அம்சம். நமக்கு எதிரே இருக்கும் ஒருவர் மீது காட்டும் கருணை. மற்றொரு அம்சம் என்னவென்றால், நமக்குள்ளேயே கருணை காட்டுவது. தியானம் ஏற்கனவே உள்ளேயே இருக்கும் கருணை என்னும் விதையினை செழித்து வளரச் செய்கின்றது ." நாம் உட்பட, அனைவரிடமும், குறைகள் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளுதல் நம்மை நாமே விரும்புவதற்கு உதவுகின்றது. என்று கூறுகிறார் ராதிகா ஸ்ரீவஸ்தவா. அழிவில்லாக உற்சாகம், நீண்ட கால வெற்றியை உறுதி செய்து,நமது ஆளுமையின் மூலம் ஒளி வீசுகிறது.தன்னிடமும் பிறரிடமும் மென்மையாக இருப்பவன் அனைவராலும் விரும்பப் படுபவன். எவ்வாறு அதிகக் கருணையுடன் இருப்பது என்பதை மேலும் அறிய...