எல்லா நாட்களுமே ஞாயிற்றுக் கிழமையாக இருக்கக் கூடாதா என்று விரும்புகிறேன். பணி என்னை அழுத்துகின்றது. ஒரு விடுமுறை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.இவ்வளவு வேலைகளுடன் விடுமுறை எவ்வாறு எடுக்க முடியும்? விளையாடுகிறீர்களா என்ன? 3 அல்லது 4 நாட்கள் ஒரு மலை வாசஸ்தலத்திற்கு செல்ல எவ்வளவு செலவாகும் தெரியுமா?கடந்த சில மாதங்களாக நான் சேமித்து வருகிறேன், ஆயினும் போக முடியவில்லை. ஒரு தேவதை பூமிக்கு வந்து செலவில்லாத விடுமுறை ஒய்விடத்திற்கு அழைத்துச் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
இது நாம் அடிக்கடி கேட்கும்,உரையாடல் அல்லவா? சரி ! நல்ல செய்தி என்னவென்றால், செலவில்லாத விடுமுறை ஒய்விடத்திற்குச் செல்வது சாத்தியமே. நீங்களே உங்களுக்கு அதைப் பரிசளிக்கும் தேவதையும் ஆவீர்கள்.
தினமும் ஒரு சிறிய விடுமுறைப் பயணம் செல்லலாம். உங்கள் கண்களை மூடிக் கொண்டு 20 நிமிஷங்களுக்குத் தியானம் செய்யுங்கள்.உள்நோக்கிப் பயணம் செய்வீர்கள்!
நீங்களே உங்கள் பயண முகவர்.சிறந்ததை வெல்லுங்கள்
தியானம் உள்நோக்கிச் செல்லும் ஓர் பயணம் ஆகும்.இதுவே சிறந்த ஒப்பந்தம், எந்த பயண முகவராலும் தர இயலாதது. இது செலவில்லாதது, இது தினசரி தொகுப்பையும் உள்ளடக்கியது. இதன் பயன்கள் பல மன அமைதி, சாந்தம், மகிழ்ச்சி, பணியில் திறமை,நேர மேலாண்மைத் திறன், போன்ற பல.
அதிதி வசிஷ்ட் ," ஓர் அழுத்தமான நாள், சஹஜ் சமாதி தியானம் செய்து இளைப்பாறி, புத்துணர்வுடனும் தெளிவாகவும் ஆக முடியும் என்று எனக்குத் தெரியும். இதுதான் எனக்கு நான் அளித்துக் கொள்ளும் சிறந்த விடுமுறை. தினமுமே விடுமுறை! " என்று கூறுகின்றார்.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான விடுமுறையை எடுத்துக் கொள்ளுங் கள்
ஒவ்வொரு விடுமுறையிலும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றீர்கள் அல்லவா?ஒவ்வொரு தியானமும் ஓர் புதிய இடத்திற்குச் செல்வது போன்றதுதான்.ஒவ்வொரு தியானமும் வித்தியாசமான அனுபவத்தினை அளிக்கும்.எந்த திட்டமும் இன்றி ஒவ்வொரு நாளும் பல புதிய இடங்களுக்குச் செல்வது போன்றதுதான் இது. கண்களை மூடி 20 நிமிடங்களுக்கு இந்தப் பயணத்தின் அழகினை ரசியுங்கள்."புதிய அனுபவத்தினைத்தேடி பல்வேறு மலை வாசஸ்தலங்களுக்குச் செல்வதுண்டு. ஆனால் அன்றாட தியானம் ஓர் புதிய அனுபவத்தினை வீட்டில் அமர்ந்தபடியே பெற உதவுகின்றது" என்கிறார் தீப்தி சச்தேவ்.
களைப்பினைத் தராத விடுமுறை
அழகான காலை நேரத்தில் பசுமையான மரங்கள் சூழ்ந்த ஓர் மலையுச்சியில் நின்று கொண்டு பறவைகளின் இயற்க்கை இசை ஒலியையும் தென்றல் காற்றையும் அனுபவித்துக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். அப்போது என்ன நிகழும்? கண்களை மூடி அந்த அனுபவத்தை முழுமையாகப் பெற விரும்புவீர்கள். அந்தக் கணங்களை வாழ்வில் எப்போதுமே உங்களுக்குள் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று விரும்புவீர்கள்.இது ஏனெனில் சில நொடிகளிலேயே நீங்கள் உங்களுக்குள் ஆழ்ந்து சென்று விடுகின்றீர்கள். தியானமும் இதே போன்ற அனுபவத்தை உங்களுக்கு அளிக்கின்றது.
விடுமுறை காலம் எப்போதுமே ஓய்வுக்காலம் என்று அழைக்கப் படுகிறது.ஏனெனில் அது உங்களை இளைப்பாற்றுகின்றது. ஆனால் பெரும்பாலும் விடுமுறைக் காலம் முடிந்து திரும்பும்போது அதிகக் களைப்பாகவும், இன்னுமொரு நாள் ஒய்வு தேவை என்னும் நிலையில் வருகின்றீர்கள்.
இது போன்றல்லாது, தியானம் உங்களுக்குக் களைப்பே அளிக்காத ஓர் ஓய்விடம். உண்மையில் அது ஆழ்ந்த ஓய்வையும், அதிக ஆற்றலையும் அளிக்கின்றது. " நான் தினமும் சில நிமிட நேரம் தியானம் செய்து, என் நாளைத் துவக்குகின்றேன். புன்முறுவலுடன் களைப்பின்றி பணி புரிய உதவுகின்றது" என்கிறார் அர்ச்சா கொட்கே
குறைந்த நேரத்தில் அதிகப் பலன்கள்
நேரம் என்பது பணம் என்னும் கொள்கையுள்ளவர்களுக்கு 20 நிமிட நேரத்தை தியானம் செய்வதில் முதலீடு செய்தால், அது பல லாபங்களைத் தருகிறது.மீதமுள்ள நேரம் அனைத்திலும் நீங்கள் அதிகமாகப் பணம் சம்பாதிக்கலாம். இது ஏனெனில், தியானம் செய்யும்போது, நீங்கள் அமைதியடைகின்றீர்கள், அதிகத் திறமையுடன் பணி புரிய முடியும். மேலும் நேரத்தைக் கையாள்வதில் சிறப்புற்று, உங்கள் வழியினைத் திறம்பட நிர்வகிப்பீர்கள்." சில நிமிஷங்களுக்கொரு முறை ஓர் வியாபார ஒப்பத்தந்தை முடிக்க வேண்டிய பணியில் நான் இருக்கின்றேன்.முன்பெல்லாம் 20 நிமிஷம் தியானம் செய்தால், அந்த நேரத்தில் ஏதேனும் ஒப்பந்தம் தவறி விடுமோ என்று நினைத்ததுண்டு. ஆனால் இப்போது தினமும் தியானம் செய்வதால், நான் அதிகத் திறமை பெற்று சரியான முறையில் ஒப்பத்தங்களை வெற்றிகரமாகப் பெற முடிகிறது.அதிகப் பணமும் சம்பாதிக்கின்றேன்" என்று கூறுகிறார் கிரண் சிங்.
வெளிநாட்டிற்கு நல்வரவு!
இப்போது விடுமுறைக்குத் தயாராகி விட்டீர்கள் அல்லவா? சரி! உங்கள் சீட் பெல்டை இணைத்துக் கொள்ளுங்கள்! புறப்படுங்கள்! நல்ல வசதியான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். தனியாகவோ அல்லது சில தியான நண்பர்களையோ அழைத்துக் கொண்டோ, இப்பயணம் செய்யலாம். குழு தியானம் ஆழ்ந்த அனுபவத்தினைத் தரும்.ஓர் நாளில் எப்போது வேண்டுமானாலும் இப்பயணம் செய்யலாம், ஆனால் காலை நேரம் நல்லது. நாள் பூராவும் சாந்தமாக இருக்க அது உதவும்.
காத்திருக்க முடியவில்லையா? இதோ விரைவில் உங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் நிகழ இருக்கும் அடுத்த சஹஜ் சமாதி பயிற்சிக்கு செல்லுங்கள். அல்லது சில தியானங்களை உங்கள் ஐ போட் டில் பதிவு செய்யுங்கள்., அல்லது ஆன் லைன் தியானங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டு திவ்யா சச்தேவினால் தொகுக்கப் பட்டது.